அமெரிக்காவை அடிபணிய வைத்த இரண்டு தலைவர்கள் !
உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் வஹாபி அரசில் தலைமைகள் முழுக்க முழுக்க அமைரிக்க உதவியிலேயே தங்கியிருக்கிறார்கள். ஸிரியாவிலும் இராக்கிலும் உள்ள ISIS மற்றும் "அல் நுஸ்ரா" பயங்கரவாத இக்வான் வஹாபி இயக்கங்களுக்கு சகல விதமான ஆயுத உதவிகளையும் வழங்குவது அமெரிக்கா என்பது உலகறிந்த பகிரங்க விடயம். இந்த இக்வான் பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் கொடுத்து ஸிரியாவையும் இராக்கையும் கடந்த 2011 முதல் அழித்துக் கொண்டிருக்கின்றது ஸியோனிஸ அமெரிக்கா.
ஆனால் அந்த பயங்கரவாத இயக்கங்களை ஆதரிக்கும் இலங்கையில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் ஏஜண்டுகளான ஜமாஅத்தே இஸ்லாமியும் , D.A. யும் அவர்களின் அரபுலக நண்பனான அமெரிக்காவை எதிர்த்து இங்கு தமது ஊடகங்களில் எழுதுகிறார்கள். அமெரிக்கா பலஸ்தீனில் செய்யும் அட்டூழியங்களை எதிர்ப்பது போல் இங்கு நடிக்கிறார்கள்.
இலங்கையில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் வஹாபிகள் உண்மையில் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள் என்றால், இதோ இங்கிருக்கும் இரண்டு உலகத் தலைவர்களும் அமெரிக்காவை மடக்கிய சாதனைகளை அவர்களின் ஊடகங்களில் கூறட்டும் பார்க்கலாம். அமெரிக்காவை இரண்டு துறைகளில் மடக்கிய இந்த இரண்டு தலைவர்களையும் பாராட்டி இங்குள்ள இக்வான் ஊடகங்கள் பேசாவிட்டால் , இக்வான் வஹாபிகள் அமெரிக்காவின் ஆட்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களே நீங்கள் இனம் கண்டுகொள்ளுங்கள்.
ஒரு தலைவர் : 2011 முதல் , பசுத்தோல் போர்த்திய புலியாக, "அரபு வசந்தம்" என்ற பெயரில் , ஸிரிய அரசாங்கத்தை வீழ்த்தி ஸிரியாவை லிபியா போன்று அழிக்க முயன்ற அமெரிக்காவையும் அதன் அடிவருடியான , இக்வான் உற்பத்தி செய்த ISIS , அந்நுஸ்ரா பயங்கரவாதிகளையும் படு தோழ்வியடையச் செய்து, ஸிரியாவைஅழிக்கும் அமெரிக்காவின் சதித்திட்டத்தை துணிவோடு முறியடித்த ஸிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸத்.
அடுத்த தலைவர் : அமெரிக்காவைத் தாக்க உலகில் எவராலும் முடியாது என்று பெருமை பேசிய அமெரிக்காவுக்கு போட்டியாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவின் சகல விதமான மிரட்டல்களையும் புறக்கணித்து, அமெரிக்காவின் எந்தப் பாகத்தையும் சில மணித்தியாலங்களில் தாக்கியழிக்கக்கூடிய அணு குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடிய பல்லெஸ்டிக் Ballistic ஏவுகணைகளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ள வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் ஓன்.
வட கொரிய இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டு 70 ம் வருட நினைவையொட்டி, வட கொரிய ஜனாதிபதிக்கு ஸிரிய ஜனாதிபதி வாழ்த்து அனுப்பிய செய்தியையும் இரு தலைவர்களின் படங்களையும் இங்கே காணலாம்.
வட கொரியா பல்லெஸ்டிக் ஏவுகணை ஏவுவதை ஜனாதிபதி அவதானிப்பதை அடுத்த படத்தில் காணலாம்.
மீண்டும் கேள்வியை நினைவூட்டுகிறேன் : அமெரிக்காவை எதிர்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் இங்குள்ள இக்வான் ஆதரவாளர்கள் , அதே அமெரிக்காவை தோற்கடித்த இந்த இரண்டு பெரும் உலகத் தலைவர்களையும் பாராட்டத் தயாரா ?
6.2.2018
No comments:
Post a Comment