Thursday, August 10, 2017

ஸிஸியின் அபார இராஜதந்திரம்

ஸிஸியின் இராஜதந்திரத்தை புகழும் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பயங்கரவாத இக்வான் அரசியல் தலைவர் முர்ஸியின் வாலைப் பிடித்ததால், மத்திய கிழக்கில் அமெரிக்கா படுதோழ்வி அடைந்தது. ஸவூதி, எகிப்து, எமிரேட்ஸ் லிபியா போன்ற பல நாடுகளின் நட்பை இழந்தது உலகறிந்த விடயம்.
ஒபாமாவை விட பயங்கரமான "முஸ்லிம் எதிர்ப்பு" கொள்கையுடன் அரசியலில் பிரவேசித்தார் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப். இதுவும் அனைவரும் அறிந்த விடயம்.
                ஆனால் பல தடவைகள் எகிப்து ஜனாதிபதி ஸிஸியுடன் தொடர்பு கொண்ட ட்ரம்ப், ஸிஸியின் கருத்துக்களாலும் நிகரற்ற சாதனைகளாலும் கவரப்பட்டு, பல விடயங்களில் ஸிஸியினால் ஆளப்படுகிறார்.
ஸிஸி அசைக்க முடியாத வீரர், எகிப்தின் பலமே மத்திய கிழக்கின் பலம், ஸிஸி விரும்பும் பயங்கரவாத ஒழிப்புக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு எதிர்காலம் உண்டு, கட்டார் பயங்கரவாதத்தின் ஆணிவேர் என்று ஸிஸி கூறுவது உண்மையே போன்ற கருத்தக்களை ஸிஸியிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளார் ட்ரம்ப். இதனை அமெரிக்க பிரபல பத்திரிகையான NEWSWEEK இல் அரசியல் ஆய்வாளர்கள் பகிரங்கப் படுத்தியுள்ளனர்.
அரபியிலும் ஆங்கிலத்திலும் உள்ள இச்செய்திகளை படித்தாவது, இது வரை காலமும் "ஸிஸி நிகரற்ற அரபு தலைவர்" என்று நாம் அடிக்கடி எமது ஊடகங்கள் மூலம் சொல்வதன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். எமது கருத்துகளுக்கு மாற்றமாக இலங்கையில் உள்ள இக்வான் சார்பு தமிழ் வஹாபி பத்திரிகைகளும், சில இக்வான் பேச்சாளர்களும் பரப்பும் ஸிஸி விரோத கருத்துக்கள் உலக அரசியல் மேடையில் எடுபடாத போலியானவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
மத்திய கிழக்கு அரசியலில் நடப்பது என்ன என்பதை 2011 முதல் நாம் எழுதும் கருத்துக்களே அடிக்கடி காலத்தால் நிரூபிக்கப்படுகின்றன என்பதையும் வஹாபி இக்வான் பத்திரிகைகள் எழுதும் கருத்துக்கள் காலத்தால் பொய்ப்பிக்கப்படுகின்றன என்பதையும் அடிக்கடி நாம் இங்கு அனுபவ ஆதாரங்கள் மூலம் எடுத்துக் காட்டுவது ஏனென்றால், படித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இக்வான் வஹாபிகளின் போலியான "கவர்ச்சியான" கருத்துக்களில் மயங்கி , மத்திய கிழக்கு விவகாரத்தில் மட்டுமல்ல, மார்க்க விடயங்களிலும் தமது ஈமானை இழக்கக்கூடாது என்ற நல்ல நோக்கம் தான். அதுவல்லாமல் இதனால் நாம் அடையும் நன்மை ஒன்றுமில்லை. எமக்கு யாரும் தொழில் தரவுமில்லை, பணம் தரவுமில்லை, பதவி தரவுமில்லை என்பதை கஹடோவிடா மக்கள் யாவரும் அறிவர்.
அல் அஹ்ராம் அரபு பத்திரிகை :
NEWSWEEK அமெரிக்க பத்திரிகை :
NEWSWEEK அமெரிக்க பத்திரிகை :
10.8.2017

No comments:

Post a Comment