Wednesday, July 19, 2017

ட்ரம்பின் தந்திரமா (3)

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்க
ட்ரம்பின் தந்திரமா – 3
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் ட்ரம்ப் மிகப் பகிரங்கமாக கூறிய ஒன்று தான் America First என்பது. அதாவது , யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உலகை ஆளும் சக்தியாக அமெரிக்காவை ஆக்குவேன் என்பது இதன் உள் நோக்கம். இது ட்ரம்பின் புதிய கண்டுபிடிப்பல்ல. அமெரிக்க தேசிய நலனை வடிவமைக்கும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (பெண்டகன்) நிரந்தர கொள்கையே இது தான். எவர் ஜனாதிபதியானாலும் இதை நிறைவேற்றுவதே முதல் கடமை. ஆனால் மற்ற ஜனாதிபதிகள் இதை வெளிப்படையாக கூறவில்லை, ட்ரம்ப் கூறினார். இவ்வளவுதான் வித்தியாசம்.
                எனவே , மத்திய கிழக்கு நாடுகளை மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிளவுபடுத்தி, உள்நாட்டுச் சண்டையை விரிவுபடுத்தி அதன் பொருளாதாரத்தை சூரையாடாமல் ட்ரம்பால் இந்த இலக்கை அடைய முடியாது. எனவே "முஸ்லிம்களை முஸ்லிம்களாலேயே அழிக்க வேண்டும்" என்ற ஒபாமா கையாண்ட அதே தந்திரத்தை கையாள ட்ரம்ப் தீர்மானித்தார்.
                பலமாகவும், அமைதியாகவும் இருந்த அரபு நாடுகளின் தலைவர்களை கொலை செய்து அந்நாடுகளை குட்டிச் சுவராக்க ,கட்டார், துருக்கி, ஸவூதி முதலிய நாடுகளைக் கொண்டு வஹாபி பயங்கரவாதத்தையும், ஈரானின் சீஆ தீரவாதத்தையும் அமெரிக்கா பயன்படு;ததிய விபரங்களை ஏற்கனவே 2011 முதல் எமது ஊடகங்களில் ஏராளமான கட்டுரைகள் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
                இலங்கையில் சீஆவை காரசாரமாக கண்டிக்கிறார்கள் வஹாபிகள். வஹாபிகளை திட்டுகிறார்கள் சீஆக்கள். ஆனால், வஹாபி இக்வான்களின் இராணுவ அமைப்பான ஹமாஸுடன் பலஸ்தீனில் ஈரான் சீஅக்கள் குதூகலிக்கிறார்கள். வஹாபி அரசியல் தலைவர் முர்ஸிக்கு சீஆ ஈரான் பெரும் ஆதரவு. எனவே இலங்கைப் பத்திரிகைகள் உங்களுக்கு தருவது பொய்யான செய்திகளே என்பதையும் ஏற்கனவே இங்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளோம்.
                ஒபாமாவின் காலத்தில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திட்டத்துக்கு ஆதரவளித்தும், கட்டார், துருக்கி, ஸவூதி மூலம் அரபு நாடுகளில் "அரபு வசந்தம்" என்ற முகமூடியில் வஹாபி பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டார் ஒபாமா. லிபியா, யெமன், ஸிரியா, இராக் போன்ற நாடுகளை அழித்தார். அப்துல் பத்தாஹ் ஸிஸி என்ற மாபெரும் தலைவரை அல்லாஹ் எகிப்துக்கு வழங்கியதால் எகிப்தை அழிக்க முடியவில்லை.
                ஆனால் ட்ரம்ப் பெரிதாக மார்தட்டிக் கொண்டு வந்து பார்த்தார். நீலைமை தனக்கு சாதகமாக இல்லை. எகிப்து, ஸிரியா, ஈரான், ஸவூதி ஆகிய நான்கு நாடுகளை "பிரித்துக் கூறுபோடும்" தனது திட்டத்தை ட்ரம்ப் செயல்படுத்த முனைந்ததை மத்திய கிழக்கு பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிய முடியும். எகிப்து ஜனாதிபதியை அழைத்து பயமுறுத்தி பேசிப் பார்த்தார். ஸிஸியின் மன உறுதியின் முன் ட்ரம்ப் தோழ்வியடைந்தார்.
                துருக்கி, கட்டாரின் உதவியுடன் ஸிரிய ஜனாதிபதியை வீழ்த்த முனைந்தார். பல முறை ஸிரிய இராணுவத் தளங்கள் மீது விமானத் தாக்குதல் நடாத்திப் பார்த்தார். அண்மையில் நடந்த ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பின் போது, "ஸிரியாவைப் பாதுகாப்பது ரஷ்யாவின் கடமை"  என்ற புட்டினின் உறுதியான ஸிரிய ஆதரவு நிலைப்பாட்டைக் கண்டு, ஸிரியாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டார்.
                ஈரானுடன் ஒபாமா செய்துகொண்ட அணு செறிவாக்கல் ஒப்பந்தத்தை முறித்துவிடுவதாக பல முறை பயமுறுத்தினார். ஈரானில் ISIS இன் தாக்குதல் ஒன்றை நடாத்திப் பார்த்தார். ஆனால், அரபு நாடுகளைப் போலன்றி, ஈரான் மக்கள் கொள்கைப்பற்றுள்ளவர்கள் என்பதால், ட்ரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதி சக்தி வாய்ந்த பலஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டு, ட்ரம்பின் எச்சரிக்கைகளை துச்சமாக மதிப்பதைக் கண்டு, இப்போது, அணு செறிவாக்கல் ஒப்பந்தத்தை முறிப்பதில்லை என்கிறார்.
                இறுதியாக எஞ்சியிருப்பது ஸவூதி. ஸவூதியைப் பயமுறுத்தி 400 கோடி டொலர்களுக்கு ஆயுத விற்பனையை செய்துகொண்டார். கட்டாரைப் பயன்படுத்தி கோஷ்டி மோதல்களையும் , ஆங்காங்கே சிறுசிறு ISIS தாக்குதல்களையும் ட்ரம்ப் ஸவூதியில் கட்டவிழ்த்து விட்டார் . ட்ரம்பின் பயங்கர திட்டத்தை உணர்ந்த ஸவூதி மன்னர் , தனது பதவியையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய அரபுலகத் தலைவர் ஸிஸியுடன் கூட்டிணைந்தார். அமெரிக்காவால் இயக்கப்படும் கட்டாரை மடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
                எகிப்து, ஸவூதி, எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளின் கட்டாருக்கெதிரான அதிரடி நடவடிக்கைகளைக் கண்ட ட்ரம்ப், உடனடியாக தனது வெளிவிவகார அமைச்சர் டிலர்ஸனை அனுப்பி கட்டாரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். முதலில் கட்டாருக்கு வந்த அவர், "கட்டாரின் நிலைப்பாடு நியாயமானதே" என்று அறிவித்துவிட்டு, ஸவூதிக்கு சென்றார். ஸவூதி மன்னர் கட்டாருக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை கூற, அதே நேரம் எகிப்தும் கட்டாரின் கடந்தகால பயங்கரவாத நடவடிக்கைகளை பட்டியல் போட்டு வெளியிட, டிலர்ஸன் திக்குமுக்காடிப் போனார். மீண்டும் கட்டார் போய், எந்த பத்திரிகையாளர் மாநாடும் நடத்தாமல் நாடு திரும்பினார்.
                "டிலர்ஸன் நல்ல முயற்சி தான் செய்தார். ஆனால் கருத்து வெளியிடுவதில் தவறிழைத்து விட்டார்" என்று ட்ரம்ப் கூறி, முகத்தில் அசடு வழிவதை மறைக்க முயன்றார்.
                ஆனால் எப்படியாவது நான்கு நாடுகளின் கோரிக்கைகளுக்கு கட்டார் அடிபணியாமல், கட்டாரைப் பாதுகாத்து, பயங்கரவாதத்தை கட்டவிழத்துவிட்டு, ஸவூதியை பிளவுபடுத்தும் உபாயங்களையே ட்ரம்ப் செய்துகொண்டிருக்கிறார்.
கட்டாரைப் பாதுகாக்க நிச்சயமாக ஈரான் வரமாட்டாது. ஈரான் மத்திய கிழக்கில் தலைவனாவதை அமெரிக்கா விரும்புவதில்லை. துருக்கியும் கட்டாரைப் பாதுகாக்க வர முடியாத விதத்தில் அங்கு உள்நாட்டுப் பூசல் விரிவடைந்துள்ளது. எனவே கட்டாரின் இன்றைய அடிபணியாத தலைக்கணம் முற்று முழுதாக அமெரிக்காவை நம்பியே இருக்கின்றது. என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரானைப் பயமுறுத்திப் பார்க்கும் ட்ரம்ப் :-
கட்டாரும் அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக டிலர்ஸனுடன் கட்டார் போலி ஒப்பந்தம் :
ட்ரம்ப் இரட்டை வேடம் : கட்டாரின் பயங்கரவாதத்துக்கு ஆதரவு :
ட்ரம்ப் இரட்டை வேடம் : கட்டாரிலிருந்து இராணுவத் தளத்தை அப்புறப்படுத்த தயாராம் :
ஸவூதி மன்னர் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த ட்ரம்ப் முயற்சி :

No comments:

Post a Comment