Monday, July 10, 2017

ட்ரம்பின் தந்திரமா - 2

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்க
ட்ரம்பின் தந்திரமா - 2
இராக்கை ஆக்கிரமித்த இரண்டாவது புஷ், ருசி கண்ட பூனை போன்று, கோழி பிடித்து ருசி கண்ட நாய் போன்று, தொடர்ந்தும் மத்திய கிழக்கில் நாடு பிடிக்கும் திட்டங்களை வரைந்தார். அதனால் அதிகமான அமெரிக்க இராணுவத்தினரை இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா இழந்தது.
ஒபாமாவின் காலத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளுக்கு இழப்பு ஏற்படாமல் மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஒபாமா தனது மத்திய கிழக்கு கொள்கையில் இரண்டை வெற்றிகரமாக சாதித்தார். ஒன்று: பின்லாடனை அழித்து , செப்டம்பர் 11 அமெரிக்க கோபுர தாக்குதலின் சூத்திரதாரியை (?) அழித்து அமெரிக்க மக்களிடம் "ஹீரோ" வானார்.
இரண்டாவது: இக்வானுல் முஸ்லிமூன், ஸலபி, தவ்ஹீத் ஜமாஅத்து என்று ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டன், அமெரிக்காவால் முஸ்லிம் நாடுகளில் வளர்க்கப்பட்ட கவாரிஜ் வஹாபி இளைஞர்களை, இது வரை காலமும் முஸ்லிம் உம்மத்தை "சிர்க்கு, பித்அத்து" மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை, அந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளரையும், உலமாக்களையும், இராணுவத்தையும், ஏன், கப்ருகளில் உள்ள ஸஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்களையும் அழித்தொழித்து, அதன் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, அமெரிக்க ஆதிக்கத்தை அரபு இஸ்லாமிய நாடுகளில் நிலை நாட்டும் வேலையை இந்த வஹாபிகள் மூலமே நிறைவேற்றும் வேலையை ஒபாமா மேற்கொண்டார்.
இந்த போலி முஸ்லிம்களை பயன்படுத்தி, அவர்கட்கு தேவையான சகலவிதமான பண, ஆயுத உதவிகளும் வழங்கி, பிரிட்டன், பிரான்ஸுடன் சேர்ந்து கடாபியை அழித்து லிபியாவை அழித்தார் ஒபாமா. யெமனை அழித்தார், இராக்கை அழித்தார், ஸிரியாவை அழித்தார். இன்னும் ஏராளம் நாடுகளில் அழிவு வேலை நடைபெறுகிறது. அல்லாஹ்வின் உதவியால் எகிப்தில் மட்டும் வெற்றிபெற தவறி விட்டார்.
இப்படியாக விசேசமாக இக்வான் வஹாபி கவாரிஜ்களைக் கொண்டே அரபு நாடுகளை அழித்தார் ஒபாமா. இதனால் சகல அரபு நாடுகளும் வஹாபி பயங்கரவாதிகளுக் கெதிரான யுத்தத்தை ஆரம்பித்தன. வஹாபியத்து பிறந்த நாடான ஸவூதியும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எகிப்துடன் இணைந்து வஹாபி தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்த ஆரம்பித்துள்ளது. பல அரபு நாடுகளின் தலைவர்களையும் உலமாக்களையும் இராணுவத்தையும் அழிக்கும்படி பகிரங்க கட்டளையிட்ட இக்வானின் வழிகெட்ட இமாமான கராழவியின் சகல கிதாபுகளையும் பூரணமாக தடை செய்துள்ளது ஸவூதி அரசு.
இப்படி சகல அரபு நாடுகளும் பயங்கரவாத வஹாபியத்தை அழிக்க ஒன்றிணையும் போது, கட்டார், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் மட்டும் "நாம் வஹாபியத்தை அழிக்க விடமாட்டோம். சகல முஸ்லிம் நாடுகளையும் ஆக்கிரமிப்பதே எமது திட்டம்" என்றாற்போல், தொடர்ந்தும் சகல அரபு நாடுகளிலும் உள்ள கவாரிஜ் வஹாபிகளுக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் எகிப்தில் இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல், இராக், ஸிரியாவில் தொடரான தாக்குதல்கள் என்பவற்றுக்கு கட்டார் உதவி செய்ததை ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒபாமாவின் காலத்தில் முஸ்லிம் நாடுகளில் கவாரிஜ் வஹாபிகளைத்தூண்டி , உள்நோக்கம் தெரியாத சில பொதுமக்களையும் தூண்டி, அரசுகளுக் கெதிராக புரட்சி செய்து தலைவர்களைக் கொலை செய்த – நாடுகளை அழித்ததன் சில தகவல்கள் இதோ :
தூனிஷியாவில் முஹம்மது பூ அஸீஸி என்ற இளைஞன் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, 17.10.2010 இல் வஹாபி புரட்சி கிளம்பியது. ஜனாதிபதி ஸைனுல் ஆபிதீன் நாட்டை விட்டு ஸவூதிக்கு தப்பியோடினார். (அரபு வசந்தம் என்ற வஹாபி புரட்சியின் ஆரம்பம் இஸ்லாம் தடை செய்த தற்கொலையில் தான் ஆரம்பமானது என்பதை அவதானிக்கவும்)
எகிப்தில் வஹாபிகள் 25.1.2011 இல் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்குக்கு எதிராக புரட்சி ஆரம்பித்து, அவரை பதவி நீக்கம் செய்து, சிறையில் அடைத்து, கவாரிஜ் இக்வான் முர்ஸி தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தார். முர்ஸியின் வஹாபி உருவத்தை அறிந் பொது மக்கள்  மூன்று கோடிக்கும் அதிகமானவர்கள் 30.6.2013 இல் முர்ஸிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் ஸிஸி எகிப்து மக்கள் பக்கம் நின்று 3.7.2013 இல் முர்ஸியைக் கைது செய்து, இடைக்கால அரசு அமைத்து, பின்னர் உலகம் போற்றும் நீதியான ஜனநாயக தேர்தல் மூலம் ஜனாதிபதியானார். ஏராளம் எகிப்து பொது மக்களை கொன்று குவித்த இக்வான் பயங்கரவாத கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தது உண்மை. ஆனால் வஹாபி இக்வான்கள்கள் தான் அதிகமானவர்கள் என்றால் சகல இக்வான்களும் ஸிஸிக்கு எதிராக வாக்களித்து ஸிஸியை தோற்கடித்திருக்கலாமே ? வாக்களிக்கும் உரிமை பூரண ஜனநாயக அடிப்படையில் நடந்ததாக ஆதரவு எதிர்ப்பு சகல உலக நாடுகளும் பாராட்டியதை வஹாபி பத்திரிகைகள் மூடி மறைப்பதேன் ?
லிபியாவில் வஹாபி புரட்சி 17.2.2011. தலைவர் கடாபி பயங்கரமான முறையில் படுகொலை.
யெமனில் வஹாபி புரட்சி 11.2.2011. ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியிழப்பு.
ஸிரியாவில் வஹாபி புரட்சி 18.3.2011. இன்று வரை ஜனாதிபதி நின்று பிடிக்கிறார். வஹாபிகளுக்கு பலத்த தோழ்வி.
பஹ்ரைனில் சீஆ புரட்சி 14.2.2011. இன்று வரை தொடர்கிறது.
அல்ஜீரியாவில் வஹாபி புரட்சி ஜனவரி 2011. வஹாபிகள் தோழ்வி.
ஜிபூட்டியில் வஹாபி புரட்சி 18.2.2011. வஹாபிகள் தோழ்வி.
இராக்கில் வஹாபி புரட்சி பெப்ரவரி 2011. தொடர்கிறது. வஹாபிகள் தோழ்வி.
பலஸ்தீனில் வஹாபி புரட்சி 13.2.2011. வஹாபிகள் தோழ்வி.
ஜோர்தானில் வஹாபி புரட்சி 14.1.2011. வஹாபிகள் தோழ்வி.
மொரோக்கோவில் வஹாபி புரட்சி 20.2.2011. வஹாபிகள் தோழ்வி. (இவ்வாரம் மீண்டும் வஹாபி ஆர்ப்பாட்டங்கள்).
ஓமானில் வஹாபி புரட்சி 18.1.2011. வஹாபிகள் தோழ்வி.
ஸவூதியில் சிறிதாக வஹாபி புரட்சி 3.3.2011. வஹாபிகள் தோழ்வி.
சூடானில் வஹாபி புரட்சி 30.1.2011. வஹாபிகள் தோழ்வி. புரட்சி தொடர்கிறது.
குவைத்தில் வஹாபி புரட்சி 2011 (பிரதமருக்கெதிராக ஆர்ப்பாட்டம். மன்னர் பாராளுமன்றத்தை கலைத்து நிலைமையை சமாளித்தார்.)
எமிரேட்ஸில் வஹாபிகளால் பதட்டம் 2011.
மொரிதானியாவில் வஹாபி புரட்சி 2011. தோழ்வி.
லெபனானில் வஹாபி ஆர்ப்பாட்டம் 27.2.2011
செச்னியாவில் வஹாபி புரட்சி 2011. வஹாபிகள் தோழ்வி.
இன்னும் பல முஸ்லிம் நாடுகளில் வஹாபிகளுக்கு கட்டார், துருக்கி, அமெரிக்க ஆயுதங்கள் கொடுத்து சிறுசிறு புரட்சிகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பயங்கரவாத கவாரிஜ் வஹாபிகளை அழித்து, முஸ்லிம் நாடுகளை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இப்போது ஒபாமா நிர்வாகம் போய், ட்ரம்ப் நிர்வாகம் கட்டார் விசயத்தில் இரட்டை வேடம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
10.7.2017

No comments:

Post a Comment