Monday, November 28, 2016

அல் அக்ஸாவை அழிக்க முயற்சி

யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை இடிக்க முயல்வது ஏன் ,
முஸ்லிம்களின் "புராக் மதில்உம் யூதர்களின் பொய்யும்
( தொடர் – 3 )
"புராக் மதில்" பற்றிய முன்னுரையையும், அதன் சில் படங்களையும்  எமது இணையத் தளத்தில் 1ம், 2ம் கட்டுரைகளில் பார்த்தீர்கள். இப்போது அதன் தொடரான இந்தக் கட்டுரையில் , தாவுத் நபி யவர்களும் அவர்களின் புதல்வர் மூஸா நபியவர்களும் யூதர்களுக்காக கட்டிய "ஹைக்கல் ஸுலைமான்" உடைத்து விட்டு, அந்த இடத்தில் தான் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது என்று யூதர்கள் கூறுவது வரலாற்று ஆதாரமில்லாத வெறும் பித்தலாட்டமே என்பதை பார்ப்போம்.
                (இஸ்லாமிய, வரலாற்று ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் இதற்கடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.)
                யூதர்களின் இப்ரு (ஹிப்ரு) மொழியில் "ஹைக்கல்" என்றால், "அல்லாஹ்வின் வீடு(بيت الإله)   என்று அர்த்தம். இது "ஸுலைமான் நபியின் வணக்கஸ்தலம்معبد سليمان מקדש שלמה என்றும், "முதுலாவது வணக்கஸ்தலம்بيت المعبد الأول בית המקדש הראשון  என்றும், "பைத்துல் மக்திஸ்பைத்துல் முகத்தஸ்  البيت المقدس בית המקדש என்றும் அரபியிலும் இப்ரு மொழியிலும் அழைக்கப்படுகின்றது.
இப்போது யூதர்களின் (பொய்யான) வாதத்தைப் பார்ப்போம் :-
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "மூரியா" என்ற மலையின் மேல்هضبة الحرم  (ஹரம் உடைய மேட்டு நிலம்) என்று அழைக்கப்படும் இடத்தில், அந்த "ஹைக்கல்" கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் கட்டட வேலை நிறைவு பெறு முன்னர்  அவர்கள் வபாத்தானார்கள். பின்னர் அவர்களின் புதல்வர் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனைக் கட்டி முடித்தார்கள். அந்த இடத்தில் தான் மஸ்ஜிதுல் அக்ஸாவும், قبة الصخرة (குப்பதுஸ் ஸக்ரா) என்ற கட்டடமும் அமைந்துள்ளன. (மஸ்ஜிதுல் அக்ஸா போன்ற அமைப்பிலான அருகேயுள்ள கட்டடம். இதனுள் உள்ள பெரிய கல்லின் மேலிருந்து தான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் பயணத்தை ஆரம்பித்தார்கள்.)
ஸுலைமான அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாபத்தான பின்னர், அவர்களின் பேரரசு இரண்டாக பிரிந்து, ஒவ்வொன்றுக்கும் அவர்களின் இரண்டு புதல்வர்களும் மன்னர்களாக ஆட்சி புரிந்தார்கள்.
வடக்குப் பகுதி நாபிலிஸ் என்ற ஊரைத் தலைநகராக கொண்டு, مملكة إسرائيل இஸ்ராயில் சாம்ராச்சியம் அல்லது مملكة السامرة ஸாமிரா சாம்ராச்சியம் என்ற பெயரில் தனி அரசாகவும்,
தென் பிராந்தியம் ஓர்சலேம் என்ற ஊரை (அல்குத்ஸ் பகுதி) தலைநகராகக் கொண்டு, مملكة يهوذا யஹூதா சாம்ராச்சியம் என்றும் அழைக்கப்பட்டன.
வடக்கில் இருந்த இஸ்ராயில் என்ற சாம்ராச்சியம் கி.மு. 721 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டது.
பிறகு யஹூதா என்ற தெற்கில் இருந்த சாம்ராச்சியமும் கி.மு. 150ம் வருடம் அழிக்கப்பட்டது.
                பிரிட்டிஷ் கலைக் களஞ்சியமான Encyclopædia Britannica 1926 ம் வருடப் பதிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: உலகில் சிதறி வாழும் யூதர்களை பலஸ்தீனில் ஒன்று சேர்த்து, யஹூதா என்ற தமது நாட்டை மீட்டெடுத்து, ஹைக்கல் ஸுலைமானை அதில் ஸ்தாபித்து, தாவூத் நபியின் சிம்மாசனத்தை அதில் அமைத்து, தாவூத் நபியின் வமிசத்தில் வரும் ஒருவரை அதில் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே யூதர்களின் குறிக்கோள் என்பதாக.
                யூதர்கள் பொய்யாக இட்டுக்கட்டிய அந்த "ஹைகல் ஸுலைமான்" பற்றி அவர்கள் கூறும் பொய்யான தகவல்களில் சில இவை :
தாவூத் நபியவர்கள் ஆரம்பித்து, ஸுலைமான் நபியவர்கள் அதனை கட்டி முடித்தார்கள்.
180000 வேலைக்காரர்கள் பங்குபற்றி, 7 வருடங்களில் கட்டி முடித்தார்கள்.
கி.மு. 586ம் வருடம் பாபில் தளபதி புக்தனஸ்ஸர் அதனை இடித்து விட்டார்.
பின்னர் கி.மு. 521 இல் மீண்டும் யூதர்கள் அதனைப் புதுப்பித்து கட்டினார்கள்.
பின்னர் மீண்டும் ரோம அரசன் தைதிஸ் அதனை அழித்தார்.
ஆனால் அதன் நினைவு யூதர்களின் உள்ளங்களில் மறக்காமல் பதிந்து நிற்பதற்காக, அவர்களின் பிறப்பு, இறப்பு, திருமணம், வீடு குடிபுகல் போன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை நினைவு கூறக்கூடிய வைபவங்களை சகல யூதர்களும் நடாத்த வேண்டும் என்று யூ மத தலைவர்கள் கட்டளையிட்டு அதன்படி நடந்து வந்தது.
இப்படியாக இரண்டாவது தடவையாகவும் அது உடைக்கப்பட்டது ஆகஸ்ட் மாதம் 9ம் நாள் என்பதால், அத்தின்ததில் சகல யூதரும் கவலை நினைவாக நோன்பு நோற்கும் வழக்கத்தை மேற்கொண்டார்கள்.
மீண்டும் க.மு. 135ம் வருடம் ஹார்தியான் மன்னரின் காலத்தில் அது உடைக்கப்பட்டு, அங்கிருந்த யூதர்கள் அனைவரும் அங்கிருந்து விரட்டப் பட்டார்கள். அதற்குப் பகரமாக அவிடத்தில் "ஈலியா காபீ தோலீனா" என்ற பட்டணம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தப்பட்டணம், உமர் ரழியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றும் வரை இருந்தது. அதனைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் அதற்கு "அல்குத்ஸ்" அல்லது "பைத்துல் மக்திஸ்" என்று பெயர் வைத்தனர்.
28.11.2016

No comments:

Post a Comment