Saturday, December 27, 2014

தற்கொலை குண்டு

(ஆங்கிலம்- வீடியோ)

இது தான் வஹாபியின் "குர்ஆன்ஹதீஸ்" !!!

பலாத்காரமாக சிறுமியை தற்கொலை குண்டுதாரியாக்கும் நைஜிரிய "போகோஹராம்" வஹாபி கவாரிஜ்கள் !

ஆபிரிக்காவின் வளமான நாடான நைஜீரியாவில் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்காக கடந்த 5 வருடங்களாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து வரும் ஒரு வஹாபி இயக்கம் தான் "போகோஹராம்" இயக்கம். நாட்டுக்கு நாடு வித்தியாசமான பெயர்கள். தலைவருக்கு தலைவர் வித்தியாசமான பெயர்கள். ஒரு பெயர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் போது இன்னொரு பெயரில் வெளிவருவது வஹாபிகளின் தந்திரம் (எமது நாட்டு நடப்பும் இது தான்).

13 வயது சிறுமியான ஸஹ்ராவை அவளின் தந்தையே வஹாபி இயக்கத்துக்கு ஒப்படைக்கிறார். அவளுடன் இன்னும் இரண்டு இளம் யுவதிகள். உடலில் தற்கொலை குண்டுகளைக் கட்டிக்கொண்டு போய், சனநெரிசலான நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான 'கானோ' என்ற இடத்தில் உள்ள மார்கட்டில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும், அதற்கு இணங்காவிட்டால் அவர்களை உயிருடன் புதைப்பதாக வஹாபிகள் பயமுறுத்தினார்கள். மற்ற இரண்டு யுவதிகளும் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டனர். 2014 டிசம்பர் 10 இல் நடந்த அந்த தற்கொலைத் தாக்குதலில் 4 பேர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இந்த அநியாயபடுபாதகச் செயலைச் செய்ய 13 வயது ஸஹ்ரா விரும்பவில்லை. ஆனால் மற்ற யுவதிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவளுக்கும் காயமேற்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளைப் பொலிஸார் கைது செய்து, பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்த போதே அவள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளாள்.

ஆம் ! ஆரம்பத்தில் "குர்ஆன் ஹதீஸ்", "சிர்க்கு பித்அத்து" என்று சிந்தனா சக்தியற்ற அப்பாவி பாமர முஸ்லிம்களை வசப்படுத்தி, ஆள் சேர்த்து, தமது வஹாபி இயக்கம் போதியளவு வளர்ச்சிடைந்த பின்னர், அடுத்த கட்டமாக, வஹாபிகளின் வேலை முஸ்லிம்களின் பள்ளிகளை கைப்பற்றுவது, உலமாக்களைத் தாக்குவது, நபிமார்களினதும் ஸஹாபாக்கள் அவ்லியாக்களினதும் கப்ரு (ஸியாரங்களை) உடைத்து தகர்த்தல், நாடுகளைப் பிடிக்க தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தல். இவற்றையெல்லாம் அறியாததால் தான் இளைஞர்கள் வஹாபிய இயக்கங்களில் சேருகிறார்கள். தரீக்கா என்ற பெயரில் உள்ள சில போலிகளும் இலங்கையிலும் வஹாபியத்து வளர உதவி செய்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கடைசி காலத்தில் கொலைகள் அதிகரிக்கும். ஏன் கொலை செய்தோம் என்பது கொலை செய்பருக்கு தெரியாது. ஏன் கொலை செய்யப்பட்டோம் என்பது கொலை செய்யப்பட்டவருக்கு தெரியாது என்பதாக. அந்தக் காலத்தைத்தான் இப்போது தவ்ஹீது, இக்வான். ஸலபி என்ற பெயர்களுக்குள் மறைந்துகொண்டு கவாரிஜ் வஹாபிகள் உலகில் உருவாக்கியிருக்கிறார்கள்.
A 13-year-old girl has said she was made to wear a bomb belt and taken to a market in Nigeria by Boko Haram extremists but refused to detonate the device.


Preview by Yahoo

No comments:

Post a Comment