Tuesday, December 16, 2014

அல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்!!

ISIS வஹாபிகள் உருவாக ஸுன்னி உலமாக்களே காரணம்!

அல் அஸ்ஹரின் அசமந்தப் போக்கே கவாரிஜ் வஹாபி ISIS உருவாகக் காரணம் என்பதை உறுதியாக நிறுவுகிறார் எகிப்தைச் சேர்ந்த அறிஞர் அப்துல் முஹ்ஸின் ஸலாமா என்பவர். (நாசகாரிகளின் சதி இல்லாவிட்டால், இப்படியான ஏராளம் ஆக்கங்களை மொழிபெயர்க்க சில மௌலவிமார்களை நியமித்து ஏற்பாடு செய்யலாம்.)



எகிப்து மதவிவகார அமைச்சும், ஸாதாத்து மார்களும், ஸூபியாக்களும் (தரீக்காக்கள்) இணைந்து வஹாபி வழிகேட்டைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரித்து விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்களாம். நாம் 1996 இல் "வஹாபி எதிர்ப்பு போராட்டம்" என்ற பெயரில் (ஸமீன்நியாஸின் சதி வரை) மூன்று வருடங்கள் செய்த வேலையை 18 வருடங்களின் பின்னர் இப்போது தான் அல் அஸ்ஹர் உலமாக்கள் செய்யப் போகிறார்கள். (இது நாம் பெருமைக்காகவோ யாரையும் இழிவு படுத்தவோ கூறுவதல்ல. மாறாக ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் விரோதிகள் எப்படிப்பட்ட அநியாயத்தை இஸ்லாத்துக்கு செய்திருக்கிறார்கள் என்பதையும், நாம் சிறு பிள்ளைத் தனமாக அந்த நாசகாரிகளை எதிர்க்கவில்லை, அவர்களுடன் கஹடோவிட முஸ்லிம்கள் சேர்ந்து தாமும் நாச வேலைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகக் கூடாது என்ற சமூகத்தின் மீதுள்ள நல்லெண்ணத்தின் காரணமாகவும், அவர்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே "துட்டனைக் கண்டால் தூர விலகு" என்ற வாக்குக்கு ஏற்ப அடிக்கடி எழுதுகிறோம்.

எகிப்து அவ்காப், அஷ்ராப், ஸூபிய்யா இப்போது தான் வஹாபி எதிர்ப்பு ஆரம்பிக்கிறார்கள் :-


(இப்படி நான் இந்தச் செய்திக்கு முன்னர் கூறினால், பள்ளத் தக்கியா சதிகாரரும், உலக அறிவு இல்லாதவர்களும் என்னுடன் பழகாதவர்களும் என்ன கூறுவார்கள் தெரியுமா ? (அதை நான் இங்கு கூற விரும்ப வில்லை. உங்களுக்கே தெரியும்).

1960 களின் இறுதிப் பகுதியில் கஹடோவிடாவில் வஹாபியத்து பரவ ஆரம்பித்த போது, புகாரித் தக்கியாவில் எமது தகப்பனாரும், பள்ளியில் கனம் அல் ஹாஜ் நஈம் ஆலிம் அவர்களும், காலியில் அப்துர் ரஹ்மான் ஆலிமும், காலி, வெலிகமையைச் சேர்ந்த இன்னும் பல உலமாக்களும் அந்த வஹாபியத்தை எதிர்த்து போராடினார்கள்.

"வஹாபியத்தின் வழிகேட்டை மக்களுக்கு நவீன, தத்துவ சாஸ்திர அடிப்படையில் விளக்கி, முஸ்லிம்களின் ஈமானைப் பாதுகாக்க வேண்டும். வஹாபியத்தை விவாதத்தில் மடக்கி தோற்கடிக்க வேண்டும்" என்ற ஆவலின் வித்து அப்போதே என் மனதில் முளைவிட ஆரம்பித்தது.

பாடசாலையில் படிக்கும் போதே துருக்கிக்கு எழுதி தஹ்லான் இமாம் அவர்கள் எழுதிய الدرر السنية போன்ற கிதாபுகளை (அரபு, ஆங்கிலம்) வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஹாபிய்யத்துக்கு எதிராக மிக விரிவாக இமாம் யூஸுப் அந்நபஹானி அவர்கள் எழுதிய شواهد الحق ("சவாஹிதுல் ஹக்கு" சத்தியத்தின் அத்தாட்சிகள்) என்ற கிதாபை எவ்வளவோ காலத்துக்கு முன்னரே எமது தந்தையார் அவர்கள் வரவழைத்திருந்தார். அதனை எனக்குத் தந்து "இது வஹாபி பித்அத்துக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உள்ள கிதாபு. இதனை நாயகமாங்களிடமும் (செய்கு முகம்மது நாயகம்) கொடுத்து அவர்களின் கையால் எடுத்து பரக்கத்து பெற்றுக் கொள்ளவும்" என்று கூறினார். அவ்வாறே செய்கு முகம்மது நாயகம் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் துஆச் செய்து தந்தார்கள். 

வஹாபியத்தை மடக்கி தக்கியாவை ஹயாத்தாக்க அவசியமான மேலதிக கல்வியைப் பெற வேண்டும் என்ற பெரும் இலட்சியத்துடன் குவைத் சென்றேன். உஸ்தாத் அப்துல் அஸஸ் ஹாஷிம், ஸையித் யூஸுப் அல் ரிபாஈ, உஸ்தாத் ஷம்ஷுத்தீன் ஆகிய பேரறிஞர்கள் ஊடாக வஹாபியத்தை விவாதத்தில் மடக்கக் கூடிய அறிவை அல்லாஹு தஆலா தந்தான்.

குவைத்தில் இருந்த 20 வருட காலமும் எமது அறையில் உள்ள எமது ஊரவர்களிடம் வஹாபியத்துக்கு எதிராக நான் கதைக்காத நாளே இல்லை என்னுமளவுக்கு அத்துறையில் மூழ்யிருந்தேன். வஹாபியத்து அரபு நாடுகளில் மிக வேகமாகப் பரவுவதையும், அரபு ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் உலக சொகுசு வாழ்க்கையில் மூழ்கியிருப்பது பற்றியும், எப்போதோ ஒரு நாள் வஹாபிகள் அரபு நாடுகளைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக்களை அடிக்கடி நான் குவைத்தில் கூறியதை எம்மவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இலங்கை வஹாபித் தலைவர் மீரான் குவைத் வந்த போது அவர்களை எமது அறைக்கு வரவழைத்து, விவாதம் நடாத்திய போது அவர்கள் ஓடிவிட்டமை, பிறகு அவர்கள் இருக்கும் இடத்துக்கே நாம் தேடிப் போய் அழைத்த போது பின்வாங்கியமை போன்ற நடப்புகளை எம்மவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

1984 அளவில் எகிப்தில் இருந்த வஹாபித் தலைவர் அப்துல்லாஹ் என்பவர் " எகிப்து அரசாங்கம் காபிர். மந்திரி சபையும் காபிர்" என்று ஒர பத்வாவை வெளியிட்ட போதுதான் (ஆழ்ந்த உஙக்கத்தில் இருந்த) எகிப்து அரசாங்கத்துக்கு திடீர் என்று அதிர்ச்சி ஏற்பட்டு, அல் அஸ்ஹர் உலமாக்களைக் கொண்டு ஒரு விவாதத்தை நடாத்தியது. அதில் வஹாபித் தலைவர் விவாதிக்க தயாரில்லை என்று கூறி எழுந்து சென்றார். அதன் வீடியோவை உஸ்தாத் ஷம்ஷுத்தீன் அவர்கள் எனக்குத் தந்து, அதை நான் எமது அறையில் பல முறை போட்டுக் காட்டியதையும், ஊருக்கு கொண்டுவந்து வீட்டில் போட்டுக் காட்டியதையும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அக்காலப் பகுதியிலேயே அரபு அரச தலைவர்களும், அல் அஸ்ஹர் போன்ற அரபு பல்கலைக் கழகங்களும் வஹாபியத்தை மடக்க உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி அடிக்கடி நாம் கதைத்து விசனப் படுவோம்.

எனவே, தக்கியாவில் நான் நியமிக்கப்பட்ட பின்னர், முதலில் ஊரில் வஹாபி வழிகேட்டை முறியடித்து, பின்னர் இலங்கையில் முறியடித்து, பின்னர் உலகில் எனக்குத் தெரிந்த, வஹாபி எதிர்ப்பில் ஆர்வம் உள்ள அறிஞர்கள் மூலம் அரபு அரசியல் தலைவர்களை அணுகி , வஹாபியத்து வேகமாக பரவுவதையும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அது அழிப்பதுடன் நில்லாது அரபு அரசியல் தலைவர்களையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற உண்மைகளை (தூரதிருஷ்டிகளை) அவர்களுக்க கூறி, அவர்களின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் உலகப் பெரும் வஹாபித் தலைவர்களை அழைத்து விவாதம் நடாத்தி, அதன் வீடியோக்களை முஸ்லிம்கள் பேசும் எல்லா மொழிகளிலும் தயாரித்து முழு உலகிலும் விநியோகிக்க வேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் பிரதான எதிரியான வஹாபியத்தை மடக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாக இருந்தது என்பதற்கு அல்லாஹ்வும், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களும் சாக்கி.

உலகில் எந்த நாட்டில், எந்த அரபு அறிஞர் வஹாபியத்தை எதிர்ப்பதில் திறமைசாலி, வல்லவர் என்ற தகவல்களை யெல்லாம் நான் திரட்டி வைத்திருந்தேன். அவர்கள் அனைவரையும் இந்த மாபெரும் இஸ்லாமிய சேவையில் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது.

எமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களில் (1996, 97, 98) ஊரில் முற்றாகவே வஹாபியத்தை மடக்கினோம். இலங்கையில் சகல வஹாபி இயக்கங்களையும் ஆட்டங்காணச் செய்து, எந்த வஹாபி இயக்கமும் எமக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யிருந்தோம். இஸ்லாத்தின் அந்தப் பொற்காலத்தைப் பற்றி தெரியாதவர்கள், எம்முடன் நெருக்கமாக அப்போது செயற்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

ஆக, அரபுலக ஆட்சியாளரு;களுக்கும், அல் அஸ்ஹர் (அதிகமான) உலமாக்களும் இன்று தாஇஷ் என்ற ISIS இன் கோரத் தாண்டவத்தைக் கண்ட பின் பதட்டமடைய 35 வருடங்களுக்க முன்னரே நானும் சில அரபு அறிஞர்களும் இந்த பேராபத்தை அறிந்திருந்தோம். அதனைத் தடுக்கும் ஆற்றல், திட்டம் எல்லாம் அல்லாஹ் கிருபையால் எம்மிடம் இருந்தன.

ஆனால் என்ன செய்ய !!!!!!! எம்மை நேரடியாக மடக்க முடியாத வஹாபிகள், தமது கையாட்களாக பள்ளத் தக்கியாவிலிருந்தே சதிகார பொறாமைக்கார, நாசகாரிகளான அஸ்ஸமீன்நியாஸ் ஆகிய கோடாறிக் கம்புகளைத் தெரிவு செய்து, அவர்கள் மூலம், என்னை 5% (ஐந்து வீதம்) கூட அறிய முடியாதவர்களைப் பயன்படுத்தி எமது பதவியைப் பறித்து, எமது "வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை" நாசமாக்கினார்கள்.

அஸ்ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் அந்த சதிநாச வேலையை 1999 இல் செய்தில்லாவிட்டால், நாம் எமது உலகளாவிய விவாத திட்டத்தை செயல்படுத்தி, 72 நரக வழிகளில் எல்லாம் மிகப் பெரிய நரக வழியான வஹாபியத்தை உலகில் மடக்கியிருக்கலாம். அரபு நாடுகளில் ISIS என்ற கவாரிஜ் வஹாபி இயக்கமே உருவாகியிருக்காது. அரபு நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் பேரழிவும் ஏற்பட்டிருக்காது. எத்தனையோ நபிமார்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் தகர்த்து நொறுக்கப்பட்டிருக்காது.

ஆம், மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்ற அல்லாஹ்வின் நாட்டம் வரும்போது அதற்கு உதவியாக நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், உலமாக்கள், அவர்களின் காதிம்கள் (خادم) போன்றோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை, உதவியாளர்களை கொடுக்கிறான். மக்கள் வழிகெட்டு பித்அத்து, குப்ரிய்யத்தில் விழுவதற்கான அல்லாஹ்வின் நாட்டம் செயல்படும் போது, வழிகெட்டவர்களை, திமிர் பிடித்தவர்களை, பொறாமைக் காரர்களை, ஜாஹில்களை, அல்லாஹ் பதவிகளில் அமர்த்துகிறான். நல்ல காலம் என்றால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும், வழிகெட்டவர்களின் காலம் என்றால் வழிகேடுகளில் சிக்காமல் ஹக்கிலேயே ஸப்ர் ஆக இருப்பதுமே நாம் செய்ய வேண்டியது.

No comments:

Post a Comment