Monday, November 13, 2017

அரபுலகில் நடப்பது என்ன?

அரபுலகில் அதிரடி மாற்றங்கள்
2011 முதல் எகிப்து, இராக், ஸிரியா, லிபியா முதலிய அரபு நாடுகளில் துருக்கி, கட்டார், அமெரிக்கா தலைமையில் நடந்த "கவாரிஜ் வஹாபி" களின் பயங்கரவாத புரட்சிகளை இலங்கையில் உள்ள வஹாபி சார்பு பத்திரிகைகள் போற்றிப் புகழ்ந்து பல வருடங்களாக தினமும் எழுதி வந்ததையும், அந்தப் பொய் புளுகு மூட்டைகளை அதிகமான இலங்கை முஸ்லிம்கள் (ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும்) தமது தலைகளில் நிரப்பியதை இப்போது மீண்டும் நினைவூட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்.
ஆனால் "ஸிரியா வெல்லும் என்றும், கட்டார், துருக்கி, அமெரிக்கா தலைமையிலான கவாரிஜ் வஹாபிகள் தோழ்வியடைவர்" என்றும் 2011 முதல் நாம் எமது நெட் ஊடகம் மூலம் தொடர்ந்து எழுதி வந்த விதமே இறுதியாக இப்போது கவாரிஜ் வஹாபி ISS பயங்கரவாதிகள் படுதோழ்வியடைந்து ஸிரிய அரசு தலை நிமிர்ந்து இருப்பதையும் அனைவரும் காண முடியும்.
இதை ஏன் மீண்டும் இங்கே நினைவூட்டுகிறேன் என்றால், அடுத்து மத்திய கிழக்கில்  நடக்கப் போகும் மாற்றங்கள் குறித்தும் இலங்கையின் வஹாபி ஊடகங்களின் "இயக்க சார்பு பொய் புளுகு மூட்டைகளை" முஸ்லிம்கள் வாசித்து நம்பினால், மீண்டும் உலக விவகாரத்தில் நீங்கள் ஏமாளிகளாக்கப் படுவீர்கள் என்பதை எச்சரிப்பதற்காகத்தான்.
எமது "மத்திய கிழக்கு ஆய்வுகள்" இரண்டு பிரதான அடிப்படைகளைப் பின்பற்றியே நாம் எழுதுகிறோம்.
ஒன்று : மத்திய கிழக்கில் கடைசி காலத்தில் என்ன நடக்கும் என்று ஏராளமான ஹதீஸ் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் நடப்புகளை ஒப்பிட்டு எழுதுகிறோம்.
இரண்டு : ஒன்றுக்கொன்று முரணான ஏராளமான உலகப் பத்திரிகைகளின் செய்திகளை ஒப்பிட்டு, "உண்மையில் நடந்தது என்ன" என்று கண்டுபிடித்து எழுகிறோம்.
அதனால் தான், ஸதாம் – ஈரான் யுத்தத்தின் போதும்,
ஸதாம் – குவைத் யுத்தத்தின் போதும்,
ஸிஸி -, கவாரிஜ் முர்ஸி யுத்தத்தின் போதும்,
வஹாபி ISS – இராக் யுத்தத்தின் போதும்,
வஹாபி ISS – ஸிரியா யுத்தத்தின் போதும்
நாம் தொடர்ந்து பல வடங்களாக எழுதியவை "மத்திய கிழக்கின் உண்மை வரலாறாகவும்"
வஹாபி பத்திரிகைகள் பல வருடங்களாக எழுதியவை "குப்பைத் தொட்டியில் போட வேண்டியவையாகவும்" ஆகிவிட்டன.
சரி,
இப்போது கட்டார், துருக்கி, ஸவூதி, ஈரான், லெபனான், அமெரிக்கா, இஸ்ரேல் சம்பந்தமாக புதிய மாற்றங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உலக ஊடகங்கள் மூலம் கேள்விப்படுகிறீர்கள். அந்த மாற்றங்களின் உண்மைத் தன்மை என்னவென்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
(தொடரும்)
13.11.2017

No comments:

Post a Comment