Friday, September 15, 2017

மியன்மாரும் இக்வான் புழுகுகளும்

மியன்மாரில் நடப்பது என்ன?
மியன்மாரில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பௌத்த பயங்கரவாதிகள் நடாத்தும் கொடூரமான தாக்குதல்களை இலங்கையில் உள்ள வழிகெட்ட இக்வானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் தமது இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த முனைகிறார்கள். ஸிரியா, இராக், மிஸ்ரில் 2011 முதல் நடக்கும் கவாரிஜ் இக்வான்களின் மனிதப் படுகொலைகளை தமக்குச் சார்பாக பத்திரிகைகளில் எழுதிவந்த அவர்கள் இப்போது மியன்மார் பிரச்சினையையும் பொய்களை இட்டுக்கட்டி பிரசுரித்து தமது இயக்கத்தை வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ என்றோ சண்டைக் காட்சிகளை இப்போது மியன்மாரை துருக்கி தாக்குவதாக சோடித்து பிரசுரித்து வாசகர்களை Brain wash ( Brain waste ) செய்ய முனைகிறார்கள்.
கடந்த வாரம் முதல் பேஸ்புக் முதலிய சில  ஊடகங்களில் பரபரப்பான ஒரு செய்தி :
" துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்கிக் கொண்டிருக்கிறது "
 பலரும் நேரடியாகவும் டெலிபோன் மூலமும் என்னிடம் கேட்டார்கள் இது பற்றி. நான் சொன்னேன், அப்படி ஒன்றும் பிரபலமான உலகப் பத்திரிகைகளில் வரவில்லையே என்று. அவர்களும் விடவில்லை. "இது இப்போது நேரடியாக வீடியோ காட்டப்படுகிறது" என்று உறுதியாக அடித்துக் கூறினார்கள். எனக்கு ஆச்சரியம். பல கோணங்களில் உள்ள பல நாட்டு செய்திகளை (முக்கியமாக முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவை) தினமும் பல உலகப் பத்திரிகைகளில் வாசிக்கும் எனக்கு அகப்படாத செய்தியா என்று ஆச்சரியம்.
                மியன்மாரில் நடக்கும் இன ஒழிப்பு கொடூரத்தை உலகில் உள்ள (சில நாடுகள் தவிர) அனேகமான நாடுகள் கணடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் துருக்கியும் ஒன்று. ஆனால் துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்கிக் கோண்டிருப்பதான வீடியோ செய்தி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும் இதனை முழுமையாக நம்பி மகிழ்ச்சியடைகிறார்கள்.
                மியன்மாரில் உள்ள அப்பாவி  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளை முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டு தாக்கி அழிக்க வேண்டாமா என்பது எமதும் விருப்பம் தான். ஆனால் அப்படி முஸ்லிம் நாடுகள் இராணுவத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் போது, துருக்கியை விசேசமாக குறிப்பிட்டு, துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்குவதாக எங்கிருந்து செய்தி வந்தது?
                இது தான் கவாரிஜ்களான இக்வான் வஹாபிகளின் கைவரிசை ! துருக்கி அர்துகான் ஒரு இக்வான் ஆதரவாளர் என்பதால் (கரழாவியை ஆதரிப்பவர் என்பதால்), அவரை முஸ்லிம்களின் தலைவராக சித்தரிக்க வேண்டும் என்பது இக்வான்களின் குறிக்கோள்.
                இக்வான்கள் இது மட்டுமா செய்தார்கள்? உலகில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து (விவரமறியாத) முஸ்லிம்களும் அர்துகானை தலைவராக புகழ வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் பெரிய ஒரு பிரச்சாரத்தை கொண்டுபோனார்கள். " அர்துகான் நக்ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்தவராம். அவ்லியாக்களின் ஸியாரங்களுக்கும் போவாராம்" இச் செய்திகளைப் படித்த சிலர் என்னிடம் இது பற்றிக் கேட்ட போது நான் கூறினேன் : இன்றைய அரசியல் நாடகங்களைப் பற்றி அரிச்சுவடியே தெரியாத பாமரர்களை திருத்த முடியாது. தெவட்டகஹ ஸியாரத்துக்கு சென்ற இலங்கை பௌத்த அரசியல் தலைவர்களை "ஸுன்னத்து வல்ஜமாஅத்து" என்று கூறுங்களேன் என்றேன்.
                இனியும் இக்வான்களின் மீடியா குபாடங்களுக்கு பலியாக யாராவது விரும்புவதென்றால் அது அவர்களின் இஷ்டம்.
மியன்மார் பற்றி சில தகவல்கள் :-
பர்மா (மியன்மார்) எல்லைகள்: மேற்கே இந்தியா, பங்களாதேஷ். கிழக்கே தாய்லாந்து, லாஓஸ்.வடக்கே சீனா.தெற்கே வங்காள விரிகுடா. மக்கள் தொகை சுமார் 51 மில்லியன். பரப்பளவு 261227 சதுர மைல்கள். 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த மியன்மார் 1948 இல் சுதந்திரம் பெற்றது. பின்னர் இராணுவ ஆட்சிக்குட்பட்டு, 2010 இல் நடந்த தேர்தலின் பின்னர் ஓங் ஸன் ஸூ கீ என்ற பெண் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இராணுவத்தின் பிடியிலேயே நாடு இருக்கிறது. மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போராடியதற்காக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்த அரச தலைவி, முஸ்லிம்களை கொன்று குவிக்க பூரண ஆதரவளிப்பது உலக அதிசயமான ஆச்சரியமாக இருக்கிறது.
                பௌத்தர்கள் 87.9 % .  கிறிஸ்தவர்கள் 6.2 % . முஸ்லிம்கள் 4.3 % . மற்றவர்கள் 1.6 % . உலகத்திலேயே மிக அதிகமாக ஒடுக்கப்பட்டு கொடுமைப் படுத்தப் படுவது மியன்மார் ரோஹீன்கா முஸ்லிம்களே என்று .நா. சபையின் அறிக்கையே சான்று பகர்கின்றது. மியன்மார் அரசாங்கம் கூறுவது போல் இன்று நேற்று பங்களாதேசில் இருந்து வந்தவர்கள் அல்லர் இந்த முஸ்லிம்கள். எட்டாம் நூற்றாண்டு முதல் மியன்மாரின் அரகான் மாநிலத்தில் முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு குடியுரிமையோ பிற அத்தியாவசிய உரிமைகளோ கொடுக்காமல் அவர்களை மியன்மார் அரசாங்கம் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றது.
                பெரும்பாலும் எல்லா முஸ்லிம் நாடுகளும் ஏராளமான பிற நாடுகளும் மியன்மார் அரசின் கொடுமைகளை கண்டித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில நாடுகள் மனிதாபிமான உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை முஸ்லிம் அகதிகளுக்கு போய்ச் சேராமல் மியன்மார் இராணுவமும் பொலிஸும் தடை செய்கின்றன. ஈரான், ஸவூதி, துருக்கி, எமிரேட்ஸ், குவைத், கட்டார், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் கடந்த வருடம் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை முதல் முடிந்தளவு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ரஷ்யா, இந்தியா சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மியன்மார் அரச கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.
                மியன்மார் முஸ்லிம்கள் படும் அவஸ்தையை உலகறியச் செய்து , .நா. மூலம் இதனை தீர்க்க அண்மையில் மிஸ்ர் (எகிப்து) இப்பிரச்சினையை .நா. வில் விவாதிக்க வேண்டும் என்று விண்ணப்பத்ததன் காரணமாக நேற்று (13.9.2017) .நா. பாதுகாப்புச்சபை எதியோப்பிய பிரதிநியின் தலைமையில் கூடி , இப்பிரச்சினையை விவாதித்து, மியன்மார் அரசாங்கம் இந்த அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இது பற்றி ரஷ்யா டுடே என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள கீழ்வரும் செய்தியில் இரண்டாம் பந்தியில், "எகிப்தின் வேண்டுகோளின் பேரில்بطلب من مصر )  ( என்றுள்ளதை இலங்கையில் உள்ள துருக்கியின் புகழ்பாடும் இக்வான்கள் தமது ஊடகங்களில் வெளியிடத் தயாரா ? உலகில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களில் மிக சக்தி வாய்ந்த தலைவராக எகிப்து ஜனாதிபதி ஸிஸி இருப்பதால், இந்தச் செய்திகள் இக்வான்களின் ஊடகங்களில் வருவதில்லை.
இலங்கையில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களே ! கடாபியைக் கொலை செய்ய கட்டளையிட்டு லிபியாவை அழித்த கரழாவியை, எகிப்தை அழிக்க ஸிஸியைக் கொலை செய்ய கட்டளையிட்டுக் கொண்டிருக்கும் கரழாவியை, ஸிரியாவை அழித்து இஸ்ரேலை "மகிழ்ச்சியில் ஆழ்த்த" அஸாதைக் கொலை செய்ய ஏவிக் கொண்டிருக்கும் கரழாவியை தமது தலைவராக போற்றும் இந்த கவாரிஜ் இக்வான்களின் போலிச் செய்திகளை நம்பி அறிவையையும் ஈமானையும் இழக்காமல் எச்சரிக்கையாக இருங்கள் !
14.9.2017

No comments:

Post a Comment