26.6.2015 வெள்ளிக்கிழமை குவைத்தில் சீஆக்களின் மஸ்ஜித் ஆகிய இமாம் ஜஃபர் ஸாதிக் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் நோன்பு வைத்த நிலையில் புனிதமான ஜிம்ஆவுக்கு வந்திருந்த போது இக்காலகவாரிஜ்களான IS வஹாபிகள் நடாத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் பற்றி நீங்கள் பல ஊடகங்களிலும் இந்த நெட்டிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
ஆனால் அந்த வஹாபி தற்கொலைத் தாக்குதல் அரபுலகில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் சீஆக்கள் ஸுன்னிகளை எதிர்ப்பதும், ஸுன்னிகள் சீஆக்களை எதிர்ப்பதுமாகவே அரபுலக அரசியல் இருந்தது. அரபு நாடுகளில் ஈரான் தலையீடு செய்வதும், ஈரானின் ஆதிக்கத்தை அரபு நாடுகள் எதிர்ப்பதும் வழக்கம். ஆனால் குவைத்தில் வஹாபியின்
தற்கொலைத்தாக்குதலுக்குப் பிறகு குவைத்தில் உள்ள சகல ஸுன்னிகளும் சீஆக்களும் ஒற்றுமையாக ஒரே பள்ளயில் தொழுவதும் பழைய குரோதங்களை மறந்து நெருங்கிப்பழகுவதும் குவைத் அரபுலகுக்கு காட்டியுள்ள மிக முக்கியமான முன்மாதிரியாகும். இதுவரை குவைத்தின் அரசியலை பலமாக சாடி வந்த லெபனான் சீஆ தலைவர் ஹிஸ்புல்லாஹ் இயக்கத் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் குவைத்தின் இந்த அழகான முணிகரமான முன்மாதிரியை வாயார வாழ்த்தி, இப்படியான ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படியான ஸுன்னி சீஆ ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட்டால் முஸ்லிம் உலகிலிருந்தே முழு மனித இனத்தின் எதிரியான வஹாபியத்தை அழிக்க முடியும். இன்ஷா அல்லாஹ். சீஆத் தலைவர் குவைத்தின் முன்மாதிரியை வெகுவாகப் பாராட்டும் வீடியோ அரபியில் இதோ!
சென்றவாரம் குவைத் மஸ்ஜித் கபீரில் மன்னர் அமைச்சர்கள் உட்பட ஸுன்னி சீஆக்கள் ஒற்றுமையாக ஜும்ஆ தொழல் :-
(பள்ளத் தக்கியா சதி நடந்தில்லாவிட்டால் இப்படியான ஏராளம் அரபு, ஆங்கில உலக முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை எமது வளங்களைப் பயன்படுத்தி நாம் தமிழ் உலகுக்குத் தந்திருக்க முடியும் அல்லவா? புகாரித் தக்கியாவின் மனித வளங்கள் பதவி மோகம், சுயநலம், மூட பக்தி காரணமாக வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றன. حسبنا الله ونعم الوكيل )
No comments:
Post a Comment