எகிப்து நாடாளுமன்றம் தீர்மானம் !
இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் (இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம்) இஸ்லாமிய போர்வையில் மறைந்துகொண்டு, பல அரபு நாடுகளிலும் குறிப்பாக எகிப்திலும் தினமும் மேற்கொள்ளும் படுகொலைகள், தேசிய சொத்துக்களை தீயிட்டுக் கொழுத்தி தேசத்துக்கு நாசம் விளைவித்தல் போன்ற தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடல் ஆகிய பயங்கரவாத நடிவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2013 டிசம்பர் மாதம் எகிப்து நாடாளுமன்றம், இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதாக எகிப்தின் உலகப் பிரசித்த பெற்ற பத்திரிகை 'அல் அஹ்ராம்' குறிப்பிட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் ( المسلم أخو المسلم ) என்பது அல்லாஹ்வின் தூதரான ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய இஸ்லாமிய சமூக ஒற்றுமையின் அடித்தளமாகும். ஆனால் இன்றைய கர்ழாவியும் முர்ஸியும் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் வஹாபி இயக்கங்களும், "இஸ்லாமிய சோதரத்துவ இயக்கம்" என்று புதிதாக இவர்கள் ஒரு இயக்கத்தை உண்டாக்கி, அவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களே "இஸ்லாமிய சகோதரர்கள்" என்று புதிய ஒரு பித்அத்தை ஏற்படுத்தி, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைத்த உலக இஸ்லாமிய சகோதரத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் இயக்கத்தைச் சாராத ஒரு (உலக) முஸ்லிமிடம் "நீ இக்வானுல் முஸ்லிமீனா" என்று அவர்கள் கேட்டால், "ஆம்" என்றால் அவர்களின் இயககத்தை சேர்ந்தவர் என்று அவர்கள் நினைப்பர். "இல்லை" என்று பதில் கூறினால், ரஸூலுல்லாஹ் அவர்கள் அமைத்த இஸ்லாமிய சகோதர அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல (முஸ்லிம் அல்ல) என்ற கருத்து வருகிறது. பார்த்தீர்களா வஹாபிகளின் பித்அத்துகளின் விபரீத வழிகேடுகள் !
இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் எந்த விதமான தொடர்புகளை வைத்துக்கொள்வதும், அதற்காகப் பிரச்சாரம் செய்வதும், அதற்கு பண உதவிகள் செய்வதும் ஆகிய செயல்கள் எல்லாம் தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப் படுத்தியுள்ளது.
1998 இல் செய்துகொள்ளப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சகல அரபு நாடுகளும் இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தீர்மானத்தை சகல அரபு நாடுகளுக்கும் அறிவிக்கவுள்ளதாக எகிப்து அரசாங்கம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment