Tuesday, June 13, 2017

மத்திய கிழக்கில் ஸிஸி ராஜதந்திரம் !

மத்திய கிழக்கில் நடப்பதெல்லாம்  ஸிஸி ராஜ தந்திரமா ?
ஏராளமான மத்திய கிழக்கு, ஐரோப்பிய பத்திரிகைகளையும் பேட்டிகளையும் பார்த்து, இன்று நடக்கும் நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது , இப்படி ஒரு யேசனை தோன்றுகிறது.
1-லிபியா, ஸிரியா, இராக் யெமன் போன்று எகிப்து நாடு அழிவதையும் அல்லாஹ் கிருபையால் ஸிஸி தடுத்தார். ஐரோப்பா, அமெரிக்கா, கட்டார், துருக்கி, ஈரானின் சதிகளை எல்லாம் முறியடித்து,  பித்னாவின் மூலவேரான முர்ஸியை மடக்கிப் பிடித்து அடைத்து விட்டார். எதிரியாக இருந்து ஐரோப்பா, அமெரிக்க அதிபர்களை தன் பக்கம் ஈர்த்தெடுத்தார். அதே நேரம் ரஷ்யா, சீனாவின் நட்பையும் பெற்றார்.
2-இது வரை பயங்கரவாதத்தை வளர்த்த அமெரிக்காவை, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு (ட்ரம்பை) மாற்றினார்.
3-வஹாபிய்ததின் தந்தையான ஸவூதியையே வஹாபி திவிரவாத வஹாபியத்தை மடக்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டவந்தார்.
4-இரண்டு தீவுகள் பற்றிய சர்ச்சையில் ஆரம்பித்து இரு நாட்டு உறவுகளே முறியக்கூடிய நிலைக்கு ஸவூதியுடன் பகைமை வளர்ந்த பின்னரும்கூட, ஸவூதிக்கு வந்து பேசி, ஸவூதி மன்னரை கைக்குள் போட்டு, வஹாபி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஸவூதியை சிறந்த நண்பனாக மாற்றினார். இதுவரை கட்டாருடன் இணைந்து வஹாபி பயங்கரவாத்தை வளர்த்த ஸவூதியை கட்டாருக்கு எதிராகவுவும் எகிப்துக்கு ஆதரவாகவும் மாற்றினார்.
5-எகிப்தில் சீஆ கொள்கையை வளர்க்க வேண்டாம் என்று ஸிஸி பதவிக்கு வந்தது முதல் சொல்லிப் பார்த்தும், ஈரான் அதற்கு அடிபணியாமல் முரண்டு பிடித்ததால், அமெரிக்கா, ஸவூதி, எமிரேட் போன்ற நாடுகள் மூலம் புதிய அணியை அமைத்து ஈரானை பயமுறுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரானில் நடந்த ISIS வஹாபி தக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக இருக்கின்ற போதும், அத்தாக்குதல், அமெரிக்கா, வளைகுடா கூட்டணியை கோபமூட்டினால், விளைவு பாரதூரமாக அமையுமே என்று ஈரான் சிந்திக்கும் அளவுக்கு, இரானை தர்மசங்கடத்தில் ஆக்கினார்.
தனது நேசநாடான கட்டாருக்கு ஆபத்தில் எத்தனை விமானம் உணவுப் பொருட்களை ஈரான் (மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு) அனுப்பினாலும், ஈரானின் சிந்தனை எல்லாம் "அடடா எங்கட பார்ளிமெண்ட், எங்கட தலைவரின் அடக்கஸ்தலத்திலேயே பயங்கரவாதி கைவரைிசையைக் காட்டிவிட்டானே!!!" என்பதிலேயே இருக்கின்றது. இதுவும் தனது நாட்டில் சீயாவைப் பரப்பி, கட்டாருக்கும் உதவும் ஈரானுக்கு எதிராக ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.
6-பயங்கரவாதத் தலைவன் கரழாவிக்கு உதவாதே , அரபு நாடுகளின் உள்விவவாரங்களில் தலையிடாதே , எகிப்தின் சினாயில் உள்ள வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் எகிப்தில் உள்நாட்டு சண்டையை மூட்டாதே , அல்ஜஸீரா ஊதுகுழல் மூலம் பயங்கரவாதிகளுக்கு பிரச்சார உதவி செய்யாதே,  என்று கடந்த பல வருடங்களாக கட்டாருக்கு ஸிஸி பல முறை எச்சரித்தும்கூட, அவ்வெச்சரிக்கையை கட்டார் தூசிக்கும் மதிக்கவில்லை. தொடர்ந்தும் எகிப்தை சின்னாபின்னப் படுத்து போராடும் வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவிக்கொண்டே இருந்தது. (இது இலங்கையில் உள்ள வஹாபி பத்திரிகைகளில் வருவதில்லை). அப்படிப்பட்ட மூக்கணம் இல்லாமல் செயல்பட்ட கட்டாரை, அமெரிக்கா முதல் பல அரபு நாடுகளின் உதவியுடன் ஓரங்கட்டினார் ஸிஸி. இது ஸிஸிக்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றி.
7-ஸிஸியை அழித்து எகிப்தை பிளவுபடுத்துவதில் இவ்வளவு காலமும் முழுக் கவனத்தையும் செலுத்திய கட்டாரை, இப்போது தன்னையே காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி நிலைக்கு மாற்றியதும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.
8-நேட்டோ உறவு என்று அமெரிக்காவின் காதலியாக இருந்து பெருமை பேசிய துருக்கி அர்துகானுக்கு, ஸிரிய – துருக்கி எல்லையில் "குர்திஷ்" நாடு அமைக்கும் அமெரிக்க திட்டம் மூலம் , அமெரிக்காவுவுடனான நல்லுறவும் முறிந்துகொண்டு வருகின்றது. தன்னை எதிர்த் துருக்கிக்கு இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டதும், துருக்கிக்கு எதிராக ஸிஸிக்கு கீடைத்த வெற்றியே. அதனால் தான் ஸவூதியில் நடந்த அரபு இஸ்லாமிய அமெரிக்க மாநாட்டுக்கு அர்துகான் வரவில்லை.
9-ஸிரியாவில் ஆட்சியை மாற்றி வஹாபிகளின் ஆட்சியமைக்க ஒபாமா, துருக்கி, கட்டார், ஸவூதி படாதபாடு பட்டார்கள். ஆனால் ஸிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஸிஸி ஆரம்ப முதலே எதிர்த்து வந்தார். இப்போது "ஸிரிய தலைவர் அஸாதை உடனடியாக மாற்ற வேண்டும்" என்ற நிலைப்பாட்டிலிருந்து, ஸவூதியும் அமெரிக்காவும் "அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றன" இதுவும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே.
                ஆக இப்போது மத்திய கிழக்கு நடப்புகளை பார்க்கும் போது, ஸிஸியின் ராஜதந்திரம் தான் வேலை செய்வது போல் தோன்றுகிறது. ஸிஸி தான் மத்திய கிழக்கு கதாநாயகன் போல் தெரிகிறது.
இது எனது சொந்த ஆய்வு. அல்லாஹ் மிக அறிந்தவன்.
12.6.2017

No comments:

Post a Comment