Wednesday, September 28, 2016

நபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
ஹிஜ்ரத்துக்கு உடன் காரணமான நஜ்து சைத்தான்.
ஸவூதியில் , ரியாதில் உள்ள நஜ்தில்தான் சைத்தானின் கொம்பு உதயமாகும் என்பதை நிரூபிக்கும் குர்ஆன் தப்ஸீர் ஆதாரங்கள்.
சைத்தானின் கொம்பு உதயமாவது நஜ்தில்தான் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பிரபலமான ஹதீஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
"இராக்கில்தான் நஜ்து" என்று அந்த ஹதீஸை திசை திருப்பி உலக முஸ்லிம்களை மடயர்களாக்கி, சைத்தானின் கொம்பாக உதித்த இப்னு அப்துல் வஹாபை பாதுகாக்க வஹாபி இயக்கங்கள் படாதபாடு படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் பிறக்கும் போதும், நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள், "அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தமது கட்டிலில் உறங்க வைத்துவிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து போனது பற்றியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மண்பிடியை காபிர்களின் தலையில் எறிந்தது பற்றியும், "தவ்ர்" குகையில் நடந்த அற்புதங்கள் பற்றியும், மதீனாவாசிகள் "தலஅல் பத்ரு" கவி படித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வரவேற்றது பற்றியும் மட்டுமே பேசிப் பழகியுள்ளோம்.
சீஆக்களோ, கர்பலா யுத்தத்தை அவர்களுடைய வழிகேடுகளுக்கு ஆதரவாக பயன்படுத்தி, நெஞ்சில் கத்தியால் குத்தி (மாரடித்து)க்கொண்டு, பல ஸஹாபாக்களையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரையும் வசைபாடும் விழாவாக முஹர்ரத்தை மாற்றியமைத்து வழிகேட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. போன்ற இக்வானுல் முஸ்லிமீன் பயங்கரவாத அமைப்பின் கிளைகள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஆத்ம சக்தி வாழ்க்கைய மூடிமறைத்து , "மதீனாவில் இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆரம்பம் தான் ஹிஜ்ரத்து கற்றுத் தரும் பாடம்" என்ற விதத்தில், பயான்களையும் , ஸெமினார்களையும் நடாத்தி, ஒவ்வொரு வருடமும் வரும் முஹர்ரத்தை "முஸ்லிம்களை வழிகெடுத்தி தமது இயக்கத்தில் சேர்க்கவும் முஸ்லிம் நாடுகளை அழிக்கவும்" ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். "மக்கள் புரட்சி" என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணி, வலுவான அரசாங்கங்களை வீழ்த்தி, அந்நாடுகளை குட்டிச் சுவராக்கி அழித்து, இஸ்ரேலை மத்திய கிழக்கில் "ஒரே வல்லரசாக" ஆக்குவதற்கு அடித்தளமாக முஹர்ரத்தை மாற்றியமைத்து விட்டார்கள்.
தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்தளவில், "முஹர்ரத்தின் சிறப்புக்களை பேசுவது , "நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகெட்ட பித்அத்து". எனவே அவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஏதோ பெயருக்கு ஒரு பயானில் சில வரிகள் கூறலாம். அவ்வளவுதான்.
ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் பிரதான கருப் பொருளான, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வராவுக்கு ஹிஜ்ரத்து செய்ய உடனடிக் காரணமாக அமைந்த பிரதான சம்பவத்தைப் பற்றிப் பேச நாம் மறந்து விட்டோம்.
இந்த உடனடிக் காரணம் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒன்று : கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மாபெரும் கொலைச் சதித்திட்டமும், அதை முறியடித்து அல்லாஹு தஆலா அவர்களைக் காப்பாற்றியதும்.
இரண்டாவது : கடைசி காலத்தில் நஜ்திலிருந்து சைத்தானின் கொம்பு (அதாவது, பட்டாளம்) வெளிப்படும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்தார்களோ, எந்த (ஸவூதி) நஜ்திலிருந்து அந்த சைத்தானின் "வஹாபி, கவாரிஜ், தக்fபீரி" பட்டாளம் வெளியாகி, தவ்ஹீது, ஸலபி, ஜமாஅதுல் முஸ்லிமீன், ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. என்ற இயக்கப் பெயர்களில் மறைந்துகொண்டு முழு உலகிலும் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி, இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த நஜ்து செய்கின் உருவில் வந்த சைத்தானே, அன்று "தாருந் நத்வா"வில் கூடியிருந்த காபிர் தலைவர்களுக்கு , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்யும் திட்டத்தையும் வழங்கினான்.
                அல்லாஹு தஆலா அந்த நஜ்து சைத்தானின் திட்டத்தை முறியடித்து, இரவோடிரவாக மக்காவை விட்டும் புறப்பட்டு மதீனா நோக்கிப் போகும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் கட்டளையிட்டான்.
                காபிர் தலைவர்களினதும், நஜ்து சைத்தானினதும் கொலைச் சதி முயற்சியை முறியடித்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா பாதுகாத்தது பற்றி, அவர்கள் மதீனாவுக்குச் சென்றபின்னர் இறக்கிய குர்ஆன் ஆயத்தில் குறிப்பிடுகிறான்.
                அந்த குர்ஆன் ஆயத்தின் தப்ஸீரில் பல இமாம்களும் நஜ்து சைத்தானின் சதி பற்றி கூறியதை, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்தைச் சேர்ந்த, "தப்ஸீர் தபரி" யும், மற்றொரு பிரபலமான தப்ஸீரான "இப்னு கஸீர்" ஆகிய தப்ஸீர்கள் குறிப்பிடுவதை அல்லாஹ் கிருபையால் இதோ உங்கள் முன் வைக்கிறேன்.
                உலமாக்கள் இந்த தப்ஸீர்களை பார்வையிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த "நஜ்து சைத்தான்" இப்போதைய ஸவூதியில் உள்ள நஜ்து தான் என்பதையும், அந்த சைத்தான் உருவாக்கிய  வழிகெட்ட பித்அத்தான "போலி தவ்ஹீதை" தான் வஹாபி இயக்கங்கள் "குர்ஆன் ஹதீஸ்" என்ற பெயரில் பரப்பி இளைஞர்களை நரகவழியில் சிக்க வைக்கின்றன என்பதையும், இந்த குர்ஆன் ஆயத்தின் ஒளியில் பொது மக்களுக்கு எத்திவையுங்கள்.
(தொடரும்)
28.9.2016

No comments:

Post a Comment