Friday, September 2, 2016

செச்னியா இஸ்லாமிய மாநாடு தீர்ப்பு . 25-27.8.2016
யார் அஹ்லுஸ்ஸுன்னா ?
வஹாபிகள் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரல்லர் !
வஹாபியத்து என்பது உலக முஸ்லிம்களை பிரித்து கூறு போடும் யூத இயக்கம் என்பதை உலக அறிஞர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டிலுமாக முழு உலகிலும் கருத்தரங்குகள், விவாதங்கள் நடாத்த வேண்டும், அதன் CD க்கள், உலகின் சகல மொழிகளிலும், சகல முஸ்லிம் வீடுகளுக்கும் வினியோகிக்கப்பட வேண்டும் . அதன் மூலமே இஸ்லாத்தின் பிரதான எதிரியான "தக்பீரி"   ( تكفيري)  கொள்கையான வஹாபியத்தை முறியடிக்க முடியும். வெறும் பயான்களால் வஹாபியத்தை மடக்க முடியாது என்பதை பல தடவைகளில் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
1996 முதல் நாம் கூறும் இவ்வேலையை முதன் முதலாக உலகில் ' ஆக்கபூர்வமான' முறையில் செய்தது, எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் ஸிஸி தான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் அல் அஸ்ஹர் உலமாக்கள் மத்தியில் பேசும் போது, "முஸ்லிம்களை காபிர் என்று கூறி, பயங்கரவாதத்தை மார்க்கமாக கொண்டுள்ள திவிரவாதிகளை மடக்குவதற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தான் செய்வதாகக் " கூறி, அப்பொறுப்பை அஸ்ஹரி உலமாக்கள் மேல் சுமத்தினார்.
சரி விசயத்துக்கு வருவோம். அந்த வரிசையில் உலகில் நடந்த மிக முக்கியமானதும், வஹாபியத்து இஸ்லாமிய கொள்கையல்ல என்பதை உலகுக்கே பறை சாட்டுவதுமான ஒரு மாநாடு தான் கடந்த 25-27.8.2016 நாட்களில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள செச்னியா  (شيشان)  வின் தலைநகர் குரொஸ்னியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச உலமாக்கள், முப்திகள் கலந்துகொண்ட மாபெரும் இஸ்லாமிய மாநாடு.
இதில் அல் அஸ்ஹர் இமாம் அஹ்மத் தீப், எகிப்து பிரதம முப்தி, முன்னாள் முப்தி, யெமன் அறிஞர்கள் ஹபீப் உமர், அலிய்யுல் ஜிப்ரி, இன்னும் ஏராளமான நாடுகளைச் சேர்ந்த பெரும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் மாநாட்டின் இறுதியில் , ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர் என்றால் யார் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் நினைவூட்டப்பட்டது. அந்த பிரகடனத்தின் அரபு வடிவம் இது :
"أهل السنة والجماعة" حسب منهج التعليم بالأزهر، يُطلق على أتباع إمام أهل السنّة أبي الحسن الأشعري، وأتباع إمام الهدى أبي منصور الماتريدي، وأهل الحديث، ولم يخرج عن عباءة هذا المذهب فقهاء الحنفية والمالكية والشافعية والمعتدلون من فقهاء الحنابلة، وهذا المفهوم بهذا العموم الذي يشمل علماء المسلمين وأئمتهم من المتكلمين والفقهاء والمحدثين وأهل التصوف والإرشاد، وأهل النحو واللغة أكده قدماء الأشاعرة أنفسهم منذ البواكير الأولى لظهور هذا المصطلح بعد وفاة الإمام الأشعري، ثم هو ما استقر عليه الأمر عند جمهرة علماء الأمة عبر القرون التالية، وهذا هو الواقع الذي عاشته الأمة لأكثر من ألف عام، حيث عاش الجميع في وحدة جامعة استوعبت التعدد والاختلاف المحمود، ونبذت الفرقة والخلاف المذموم
சுருக்கம் :-
( அல் அஸ்ஹரில் போதிக்கப்படும் அடிப்படையில், அஹ்லுஸ்ஸுன்னாவின் இமாமான அஷ்அரி இமாம், மாதுரீதீ இமாம் ஆகியவர்கள் தெளிவுபடுத்திய அக்கீதா கொள்கைகளும், முஹத்திஸீன்களும், ஹனபீ, மாலிக்கி, சாபிஈ, மத்ஹபுகளுடன் ஹன்பலி மத்ஹபில் நடுநிலையானவர்களும், ஸூபியாக்கள், அரபு இலக்கண மொழி அறிஞர்களும், இந்த அக்கீதாவில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருப்பவர்களும் தான் அஹ்லுஸ் ஸுன்னாக்கள் அவார்கள். இவர்கள் கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒரே சமூகமாகவும், பிளவுகள் இன்றியும் வாழ்ந்து வருகிறார்கள் ).
1000 வருடங்களுக்கும் மேலாக , முழு உலகிலும் "ஸுன்னத்து வல்ஜமாஅத்து" என்று ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் இவர்களே.
பயங்கரவாதிகளான, கவாரிஜ்களான, பித்அத்துவாதிகளான, வழிகெட்ட வஹாபிகள் "ஸுன்னத்து வல்ஜமாஅத்தைவிட்டும் நீங்கியவர்கள்" என்ற முடிவை மேற்சொன்ன பிரகடனம் உறுதிப்படுத்துகின்றது.
உலகில் பல்லாயிரம் பயான்கள் நடக்கின்றன. ஏராளம் மாநாடுகள் நடக்கின்றன. ஆனால் அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து இளைஞர்கள் வஹாபியாக மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். வஹாபியத்து கூடிக்கொண்டே வருகின்றது. ஏன்? ஏதோ ஒரு இடத்தில் குறை இருக்கின்றது. அந்தக் குறையை அகற்றி நாம் 1996,97,98 இல் நடாத்திய வஹாபி எதிர்ப்பு போராட்டத்தில் யாருமே அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் வஹாபியத்துக்கு போக வில்லை. வஹாபிகள் பலர் அஹ்லுஸ் ஸுன்னாவில் சேர்ந்தார்கள். ஆனால் இன்று வஹாபியத்தை மடக்குவதில் எகிப்து போன்ற சில நாடுகளில் "இராணுவ பலம்" தான் உபயோகிக்கப் படுகின்றது. நாமோ "அறிவு ஆதாரப் புரட்சி" மூலம் மட்டுமே இதனைச் சாதித்தோம். அல்ஹம்து லில்லாஹ்.
               
இந்த மாநாடு பற்றி பாராட்டி வெளிவந்த ஏராளம் பத்திரிகைகளில் சிலதை இங்கு குறிப்பிடுகிறோம்.
ஆம் , அல்லாஹ்வுடனேயே எதிர்த்துப் பேசிய சைத்தானின், பட்டாளத்தினர் சும்மா விடுவார்களா? தாம் "ஸுன்னத்து வல்ஜமாஅத்து அல்லர்" என்ற தீர்ப்பு உலக முஸ்லிம் பேரறிஞர்களால் வஹாபிஸலபிகளுக்கு கொடுக்கப்பட்டதும், சைத்தானின் படையினரான வஹாபிகளும் குழம்பிப் போய்தமது கவாரிஜ் ஊடகங்கள் மூலம் செச்னியா இஸ்லாமிய மாநாட்டை எதிர்த்து வாய்க்கு வந்தபடி யெல்லாம் உளறிக் கொட்டினார்கள். ஆனால் இவற்றில் கூறப்பட்ட கருத்துக்கள் எதுவும் எமது ஊரில் உள்ள "அற்ப" வஹாபிகள் கூறும் பேச்சுகளின் தரத்தை தாண்டியதல்ல என்பதை இஸ்லாமிய அக்கீதாவை முறையாகப் படித்த எவரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
                கீழே தரப்படும் வஹாபி பத்திரிகைகளின் எதிர்ப்புக்கள் சகலதையும் , இரண்டேயிரண்டு வார்த்தைகளில் அடக்கலாம். அவை தான் :
"பொய்"
"
நுனிப்புல் மேய்தல்"
இதோ வஹாபி பத்திரிகைகளின் உளரல்கள் :-
( வருந்துகிறோம் :-
இவற்றில் உள்ள கருத்துக்களையும் இன்னும் எமது நெட்டில் நாம் வெளியிடும் ஏராளம் பத்திரிகை, வீடியோக்களையும், தமிழில் மொழி பெயர்த்து உங்களுக்கு தருவதற்கு நாம் விரும்புகிறோம் தான். ஆனால் அந்த வேலைக்கு தேவையான ஆட்பலம் , வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதால், தமிழில் தர முடியாததையிட்டு வருந்துகிறோம் ).
31.8.16

No comments:

Post a Comment