Thursday, January 8, 2015

நவவி இமாமின் ஸியாரம் தகர்ப்பு

இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஸியாரம் வஹாபிகளால் தகர்ப்பு !

கி.பி. 1233 இல் ஸிரியாவில் உள்ள நவா என்ற ஊரில் பிறந்து, 1277ம் வருடம் வபாத்தானார்கள் நவவி இமாம் அவர்கள். 44 வருடங்களே வாழ்ந்த அவர்கள் அக்காலத்தில் உலகின் மாபெரும் இமாமாகத் திகழ்ந்தார்கள். ஹதீஸ் கலை விற்பன்னர். ஸஹீஹ் முஸ்லிமுக்கு ஏராளம் பாகங்களைக் கொண்ட மாபெரும் விளக்கவுரை எழுதினார்கள். இஸ்லாமிய சட்டக் கலையில் சாபிஈ மத்ஹபின் தூனாக அன்றும் இன்றும் விளங்குகிறார்கள். அவர்களின் அடக்கஸ்தலம் (ஸியாரம்) சிரியாவில் நவா என்ற ஊரில் அமைந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் தினமும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவர்களின் ஸியாரத்துக்கு வருகை தருவார்கள்.

அப்படிப்பட்ட மாபெரும் இமாமின் ஸியாரத்தை "அந்நுஸ்ரா" என்ற கவாரிஜ் வஹாபிகள் (ISIS போன்ற பயங்கரவாத வஹாபி அமைப்பு) நேற்று குண்டு வைத்து தகர்த்துவிட்டனர். لا حول ولا قوة إلا بالله العلي العظيم கப்ருகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது, செருப்பு அணிந்து கப்ருகளை மிதிக்க கூடாது, கப்ருக்கு மேல் நடக்கக் கூடாது, கப்ருகளை மிதிப்பதை விட உங்கள் உடுமானங்களுக்கு தீ வைத்துக் கொள்வது நல்லது என்றெல்லாம் போதித்த ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளுடன் இந்த "தவ்ஹீது" வாதம் பேசும் வஹாபிகளின் இந்தச் செயலை ஒப்பிட்டுப் பாருங்கள். இஸ்லாத்துக்கும் வஹாபிகளுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே கடந்த நான்கு வருட அரபுலக வஹாபி புரட்சிகளின் போது ஏராளம் அவ்லியாக்களின் ஸியாரங்களையும், ஏராளம் மஸ்ஜிதுகளையும், பல ஸஹாபாக்களின் ஸியாரங்களையும், இராக்கில் உள்ள நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஸியாரத்தையும் குண்டு வைத்து தகர்த்துவிட்டனர் வஹாபி பயங்கரவாதிகள்.

உலகம் அநியாயத்தால் நிரம்பி வழியும் போது தான் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருவார்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்படி அநியாயத்தால் உலகை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் வஹாபிகள். அப்படிப்பட்ட வஹாபிகள் கஹடோவிடாவிலும் சகல ஊர்களிலும் உலகிலும் உருவாக உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் "தரீக்கா" என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நாசகார நிர்வாகிகள்.

வஹாபிகள் ஸிரியாவில் குண்டு வைத்து தகர்த்த இமாம் நவவி அவர்களின் ஸியாரம் ( விடியோ) :-


வஹாபிகள் ஸிரியாவில் குண்டு வைத்து தகர்த்த 1886 இல் கட்டப்பட்ட தக்கியா. (படங்கள்) :-



( வஹாபி பயங்கரவாதம் பற்றிய அடுத்த கட்டுரையை எதிர்பாருங்கள் )

No comments:

Post a Comment